Monday, April 4, 2011

ஒரு முறை “சார்ஜ்” செய்தால் பல மாதங்கள் பேசலாம்: அதி நவீன செல்போன் தயாரிப்பு!


ஒரு முறை “சார்ஜ்” செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.   செல்போன்களில் உள்ள பேட்டரிகளை மின்சாரம் மூலம் “சார்ஜ்” செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி “சார்ஜ்” செய்யும் நிலை உள்ளது. ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு “சார்ஜ்” நிற்கும். தற்போது ஒரு முறை “சார்ஜ்” செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை. அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான “நானோடியூப்”கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment