நண்பர்களே! நாம் யுஎஸ்பி போர்ட்டின் மூலம் பலசாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். உதாரணம் பென்டிரைவ், புளூடூத், போன்றவை. இதனை நாம் விரும்பும் போது மட்டும் பயன்படுத்தி மற்ற நேரங்களில் இந்த சாதனங்கள் கணிப்பொறியில் இயங்கா வண்ணம் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.

1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில் மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.

2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்





3.நண்பர்களே! இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.

5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

6. 4 என்று டைப் செய்தபிறகு ok- கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.
7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை 4 என்று கொடுத்து ok செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enableசெய்ய இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது. ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில்ஓகே எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன் செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.

நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
|
No comments:
Post a Comment