Wednesday, March 30, 2011

மைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உருவாக்க


மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டினை நம்மில் பலரும் பல வருடங்களாக பயன்படுத்தி வந்தாலும், இதனை பெரும்பாலான பதிவர்கள் ஒரு ப்ளாக் டூலாக உபயோகித்து இடுகையை உருவாக்கியதில்லை என்பது  உண்மை. 

வேர்டு 2007 -இல் இடுகையை உருவாக்கி பப்ளிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  இதனை உருவாக்க உங்கள் கணினியில் NHM Writer அல்லது வேறு ஏதாவது ஒரு ஒருங்குறி கருவி இருத்தல் அவசியம். முதலில் உங்கள் MS-Word 2007 திறந்து கொண்டு, Office பட்டனை க்ளிக் செய்து New என்பதை க்ளிக் செய்யுங்கள். 
இப்பொழுது திறக்கும் திரையில் New blog post ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இப்பொழுது வரும் Register a Blog Account வசனப் பெட்டியில் Register Now பொத்தானை அழுத்தி, அடுத்து வரும் பெட்டியில், உங்கள் Blog Provider ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக Blogger ஐ தேர்வு செய்வோம்.
 
இனி ப்ளாக்கருக்கான உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.
 
 
படங்களை இணைப்பதாக இருந்தால் Picture Options க்ளிக் செய்து, தேவையான URL ஐ (FlickR / PhotoBucket) கொடுங்கள். 


அடுத்து வரும் திரையில் உங்கள் ப்ளாக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் உங்கள் இடுகையை எழுத துவங்கலாம். வேர்டு தொகுப்பில் உள்ள பல்வேறு துணைக் கருவிகளைக் கொண்டு உங்கள் இடுகையை இன்னும் அழகு படுத்தலாம்.


இடுகையை உருவாக்கிய பிறகு, Publish பொத்தானை சொடுக்கி, Publish அல்லது Publish as Draft என்பதில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து உங்கள் இடுகையை Publish செய்து கொள்ளலாம்.


இந்த வசதியை பயன்படுத்தி நான் ஒரு இடுகை மட்டுமே உருவாக்கினேன், எனக்கு படங்களை இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன. மற்றபடி வேர்டில் வழக்கமாக பணிபுரிவது போல எளிதாகவே இருந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

No comments:

Post a Comment