Sunday, December 19, 2010

START BUTTON - ஐ நிரந்தரமாக மாற்றுவது எப்படி ?

நிரந்தரமாக Start பட்டன் இன் பெயரை மாற்றுவது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்.
System File களுடன் விளையாடப் போகின்றோம் மிகக் கவனமாக பின்வரும் செயல்முறையை செய்யவும்.
முதலில் ResHacker என்ற இந்த மென்பொருளை இங்கே Click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • பின் உங்கள் கணணியின் C Drive இன் Windows என்ற Folder க்குள் ( C:\WINDOWS ) உள்ள explorer.exe என்ற File ஐ Copy பண்ணி வேறு ஒரு Folder இல் Paste பண்ணவும்.
  • பின் ResHacker ஐ Open பண்ணி அதனுள் வெளியில் Copy பண்ணி வைத்த explorer.exe என்ற File ஐ இழுத்து அதனுள் விடவும் (drag and drop)
  • பின்

    படத்தில் காட்டியவாறு String Table முன் உள்ள + அடையாளத்தை Click செய்து

    அதில் 37வது Folder இன் முன் உள்ள + அடையாளத்தை Click செய்து 1033 என்பதை click பண்ணவும்.

  • வலப்பக்கத்தில் உள்ள Start என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பிய பெயரைக் கொடுத்து பின் மேல் உள்ள Compile Script என்பதை Click செய்யவும்.
  • பின் File சென்று Save as என்பதில் explorer123.exe என பெயர் கொடுத்து Save பண்ணவும்.
  • பின் Save பண்ணிய explorer123.exe C:\WINDOWS என்ற Folder இல் Paste செய்யவும்.
  • பின் Run இல் regedit என type செய்து Registry Editor ஐ Open பண்ணிக் கொள்ளவும்.
  • பின் அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற ஒழுங்கில் செல்லவும்.
  • பின் Winlogon என்பதை

    Click செய்து அதன் வலப்பக்கத்தில் உள்ள Shell என்பதை Right click செய்து

    Modify என்பதை கிளிக் செய்து Value data என்ற இடத்தில்
    explorer123.exe என Type செய்யவும்
  • பின் உங்கள் கணணியை Restart பண்ணவும் இனி உங்கள் கணணியில் நிரந்தரமாகவை Start இன் பெயர் மாறியிருக்கும்.
நீங்கள்

பழையபடி Start என்ற பெயர் வேண்டும் என்றால் மேற் கூறிய முறையில்

Registry Editor க்கு சென்று Shell ஐ Modify பண்ணி Value data என்ற

இடத்தில் explorer.exe என என கொடுத்து உங்கள் கணணியை Restart பண்ணவும்.

செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment