
அதனால் இதற்கான டிரைவர் புரோகிராமினை இதன் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த பிளாஷ் டிரைவினை 5.5 Designers என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை எளிதாக உங்கள் பாக்கெட்டில் ஒரு நாணயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல, எடுத்துச் செல்லலாம். இதன் விட்ட அளவு 36 மிமீ. இதன் தடிமன் 9 மிமீ. நாணய வடிவில் இருப்பதால் பக்கத்து யு.எஸ்.பி. போர்ட்டில் வேறு சாதனம் ஏதேனும் செருகப்பட்டிருந்தால், இதனை இணைப்பது கடினமே. இதன் யு.எஸ்.பி. ப்ளக் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில் இந்த ப்ளக்கினை இழுத்துச் செருக வேண்டியுள்ளது. இதன் செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. எழுதும் மற்றும் படிக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது. குறைவான எடையில், சிறிய அளவில் இருப்பதால், எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிரைவ்களில் இது அதிக வசதி கொண்டதாக உள்ளது.
இதனுடைய தனித்தோற்றம் விற்பனைக்கு ஊன்றுகோலாகவும், ஸ்டைலாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட இந்த பிளாஷ் டிரைவ் ரூ. 1,200 ஆகும். ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது. மற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், புதுமையை விரும்புபவர்களுக்கும், வித்தியாசமான சாதனங்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஓர் அருமையான சாதனமாகும்.
|
நானும் இதைப் பற்றி அறிந்திருந்தேன் . மீண்டும் புதுப்பிதமைக்கு நன்றி தல
ReplyDeleteநானும் இதைப் பற்றி அறிந்திருந்தேன் . மீண்டும் புதுப்பிதமைக்கு நன்றி தல
ReplyDelete