Saturday, December 4, 2010

பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்

 இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும்

இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.


இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.


முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.





அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்





மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.





நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

No comments:

Post a Comment