
அமெரிக்க விஸ்கொன் மாநிலத்தைச் சேர்ந்த வில்லார்ட் (79) வழமை போல கடந்த திங்கட்கிழமை இரவு தனது பாசமிக்க மனைவியான கரேன் (57) இற்கு முத்தமிட்டபோது எதிர்பாராத அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. ஆம், பாசத்தில் அவர் முத்தமிட்டபோது பதிலுக்கு அவரது மனைவி நாக்கினை கடித்து துண்டாக்கியுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத அவர் வலியில் அலறியுள்ளார். துண்டாக்கப்பட்ட நாக்கினால் சத்தமிட்டு கதறக்கூட முடியாத அவர் உடனே அவசர அழப்புச் சேவைக்கு தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் தனது நிலமையை அவர்களுக்கு புரிய வைத்தள்ளார் வில்லார்ட். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு பொலிஸாரும், அம்புலன்ஸ் வண்டியும் விரைந்துள்ளது. பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்த போது அவரின் மனைவி இரத்தம் தோய்ந்த ஆடையுடன் காணப்பட்டதுடன் தேநீர் கோப்பையொன்றையும் அவர்கள் மீது எறிந்துள்ளார்.
எனினும் பொலிஸார் அப்பெண்னை கைது செய்ததுடன் வில்லார்ட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். துண்டாக்கப்பட்ட நாக்கினை பனிக்கட்டிகளுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நாக்கினை ஒட்டவைப்பதற்கு வைத்தியர்கள் தற்போது போராடி வருகின்றமையே எமக்கு கிடைத்த கடைசித் தகவலாகும்
|
No comments:
Post a Comment