Friday, December 3, 2010

வரப்போகிறது விண்டோஸ் 8 இயங்குதளம் !



கடந்த வருடம் அக்டோபர் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இயங்குதளம் நல்ல வளர்ச்சியில் சென்று கொண்டுள்ளது. இதுவரை 240 மில்லியன் பதிப்புகள் விற்று தீர்த்திருப்பதாக நிறுவனம் சொல்லியுள்ளது. இதற்கு முன்பை விட அழகிய தோற்றத்துடனும் வேகத்துடனும் விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டதே ஆகும். பயன்படுத்தவும் எளிமையாக உள்ள இந்த இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு எப்போது என்பதே பலரின் கேள்வியாய் இருந்தது.

எப்படியும் கண்டிப்பாக இன்னும் இரண்டு வருடங்களில் விண்டோசின் அடுத்த பதிப்பு விண்டோஸ் 8 வந்து விடும் என்ற செய்தி இருந்தது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் முதலாண்டு விண்டோஸ் 7 கொண்டாட்டத்தில் நெதர்லாண்ட்ஸ் நாட்டு மைக்ரோசாப்ட் தளத்தில் கீழ்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது. "மைக்ரோசாப்ட் விண்டோசின் அடுத்த பதிப்பை கொண்டு வரும் வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்" என்று தெரியாத்தனமாக உளறிக் கொட்டிவிட்டது.
எனவே 2012 இறுதியில் விண்டோஸ் 8 வருவது உறுதியாகிவிட்டது. இதிலும் இப்போது இருப்பதை விட அதிக வசதிகள் இருக்கும் என நினைக்கலாம்.
இதன் பிட்டா பதிப்பு ஜனவரி 2012 ல் வெளியாகும் எனத்தோன்றுகிறது. விண்டோஸ் 7 இல்லாதவர்கள் விண்டோஸ் 8 வருவதற்குள், விண்டோஸ் 7 க்கு மாற்றிக்கொள்ளலாம். நன்றி!

No comments:

Post a Comment